சட்டமன்றத் தேர்தல் மக்களிடம் கருத்து கேட்கும் வாகனம்

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கருத்து கேட்பு வாகனப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் நகரத் தலைவர் மணி ராஜன் ஏற்பாட்டில், கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் இந்த வாகனப் பயணத்தை அம்மன் கோவில் திடலில் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் பல்வேறு பகுதிகளில் சென்று பொதுமக்களிடம் விண்ணப்பங்களை வழங்கி, அவர்களின் கருத்துக்களை சேகரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி