அருப்புக்கோட்டை அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ஷாஜகான், அருப்புக்கோட்டை சிஎஸ்ஐ சமுதாய கூடத்தில் சங்கத்தின் வருடாந்திர வருகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து, மேலும் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, அரசு மாணவர் விடுதிக்கு பீரோ, நாற்காலிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.