விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் இருக்கும் நிலையில் பலரும் வரிசையாக விஜய் கட்சியில் இணைந்து வருவது அங்கு தவெகவின் கை மேலும் ஓங்கி வருவதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.