அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி(43). இவரது குடும்பத்தாருக்கும் இவரது உடன்பிறந்த சகோதரர் கரை முருகன் குடும்பத்தாருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து இருதரப்பிலும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் நேற்று ஜீலை 10 இரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.