இதுகுறித்து, மதுரை மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் Compliance Mela-வினை TN-RISE ஏற்பாடு செய்துள்ளது.
மேற்காண் சேவைகளின் மூலம் பெண் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் பிரதானசாலை மதுரையில் வருகின்ற 07. 02. 2025 அன்று காலை 10. 00 மணி முதல் மாலை 06. 00 மணி வரை நடைபெறுகிறது.