காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது

சாத்தூர் நான்கு வழிச்சாலை படந்தால் சந்திப்பு மேம்பாலத்தின் அடிப்பகுதி வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் செல்ல கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேரில் வந்து பார்வையிட்டார். அவர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர், மேம்பாலத்தின் கீழ் வழியாகச் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்தி