எகிப்து நாட்டில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை ஒன்று கால் மேல் கால் போட்டு சாவகாசமாக படுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் நல மருத்துவரான இஸ்லாம் எல்டே தனது இணைய பக்கத்தில் பகிர்ந்த இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளதுடன், "புகைப்படம் எடுக்க போகிறீர்களா? இருங்க போஸ் கொடுக்கிறேன்" என்று குழந்தை சொல்வது போல் நெட்டிசன்கள் நகைச்சுவையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.