பீகாரில் தேர்தல் நடைபெறும் பகுதியில் வன்முறை

பீகார் மாநிலத்தில், தேர்தல் நடைபெறும் பகுதியில் வன்முறை வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்ததாக பரவிய வதந்தியால் 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் கோபால்கஞ்ச் பகுதியில், ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறை வாகனத்திற்குத் தீவைத்த வன்முறை கும்பலை கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து, அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி