வன்முறையைத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விசிக தலைவர் திருமாவளவனை விடுவிக்க மறுத்த புதுச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குறித்த காலத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது. கீழமை நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், திருமாவளவனுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.