விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே பனங்குப்பம் கிராமத்தில், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த சுகாதார நிலைய டிரைவர் சங்கரின் வீட்டை நள்ளிரவில் உடைத்து மர்ம நபர்கள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 30 கிராம் வெள்ளி கொலுசுகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.