விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., சரவணன், போலீசாரை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார். குறிப்பாக, கடந்த 20ம் தேதி, செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாம்பட்டு கிராமத்தில், வயதான தம்பதியினரை உறவினரே கொலை செய்த வழக்கில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய உதவிய அவலுார்பேட்டை முதல் நிலைக் காவலர் ஏழுமலை. செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தில் கடந்த 28ம் தேதி நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு-2ல் பணிபுரியும் ஏட்டு முருகவேல், முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் 30ம் தேதி சித்தணி அருகே வாகன சோதனையில் பதிவுவெண் இல்லாத லாரியை பறிமுதல் செய்ததற்காகவும் பாராட்டப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி செல்லும் முதல்வர் விஜய் விமான நிலையத்திலிருந்து சாலைவலம்