விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். முன்னதாக, மாணவ மாணவிகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி விழுப்புரம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தலைமை மருத்துவமனையில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.