விழுப்புரம் நேரு வீதியில் 79 ஆண்டுகள் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சி பிரசவ விடுதி கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே (1947-இல்) திறக்கப்பட்ட இக்கட்டிடத்தின் உருவாக்கத்தில், அப்போதைய அமைச்சர் ருக்மணி லட்சுமிபதி, நகர்மன்றத் தலைவர் கோவிந்தராஜுலு நாயுடு உள்ளிட்ட பலரது வரலாறு இணைந்துள்ளது. தற்போது இடிக்கும் பணிகளால் அடிக்கற்களும் உடைந்து சேதமடைந்து வருவதால், "கட்டிடமே மறைந்தாலும், அதன் வரலாற்றைச் சொல்லும் எஞ்சியிருக்கும் அடிக்கற்களையாவது மாவட்ட நிர்வாகம் விரைந்து பாதுகாக்க வேண்டும்" என்று வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன் கோரிக்கை விடுத்துள்ளார்.