கடலூர் அழகப்பசமுத்திரத்தைச் சேர்ந்த தேவஜெசிப்பிரியா (22) காதல் திருமணம் செய்து 3 மாதங்களிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட பெண் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால், வளவனூர் காவல் நிலையத்தை உறவினர்களும் விசிக கட்சியினரும் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.