விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் பனையபுரம் சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. வாகன ஓட்டுநர் பிரதாப் (44) என்பவரிடம் இருந்து 200 மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதாப் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.