விழுப்புரம்: வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற அபிதா பேகம் (47) திரும்பி வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்தே கால் சவரன் நகைகள், ஒரு வெள்ளி மோதிரம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.