விழுப்புரம் ஆடல் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடந்த 9ஆம் தேதி உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.