வளவனூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பூவரசன்குப்பத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (32). இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த நபர், சிவசக்தி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி