செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தபோது ஏற்பட்ட காதலால், விழுப்புரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (26) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஆகியோர் காதலித்தனர். விழுப்புரத்திற்கு வந்த இளம்பெண், பிரவீன்குமாரைத் திருமணம் செய்யக் கேட்டபோது, அவனும் அவனது தாயும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.