திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த மணி (66) என்பவர், மணக்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.