விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அருகே, காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவசங்கர் (47), ராணி (34), நிதீஷ் (14) மற்றும் புனிதவள்ளி (24) என நான்கு பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காணை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.