அரசு பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி புகட்டுவதாகவும், இதனால் அரசு பள்ளிகள் முதன்மையானவையாக இருப்பதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் எந்த பள்ளியில் கல்வி பயிலுகிறோம் என்று பார்க்க கூடாது. படித்த பள்ளியிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறோம் என மாணவர்கள் கருத வேண்டும் என்றும் மாணவர்கள் செல்போனை எவ்வாறு தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்லி தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
செல்போனில் டெக்னாலஜி என்ற பெயரில் வளர்ச்சியும் இருப்பதாகவும் தேவையில்லாதது இருப்பதால் கல்வி பாதிக்கபடுவதோடு மனரீதான பாதிப்பிற்கு மாணவர்கள் உள்ளதாக கூறியுள்ளார். அரசியலுக்கு வரவேண்டுமென்று சரியான இடத்திலிருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார்.