விழுப்புரத்தில் 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பிடிபட்டது

விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிராக்டர் சேல்ஸ் & சர்விஸ் நிறுவனத்தில் இன்று மாலை ஏழடி நீளமுள்ள நல்ல பாம்பு காணப்பட்டது. இதனால் ஊழியர்கள் அச்சமடைந்தனர். உடனடியாக விழுப்புரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமை தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாகப் பிடித்து அருகிலுள்ள காப்புக் காட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி