விழுப்புரம்: காவலர் தேர்வு 1003 பேர் தேர்வு எழுத வரவில்லை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. மொத்தம் 10,859 பேர் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில், 9,856 பேர் (7,548 ஆண்கள், 2,308 பெண்கள்) தேர்வில் பங்கேற்றனர். 1,003 பேர் (812 ஆண்கள், 191 பெண்கள்) தேர்வுக்கு வரவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். கர்ப்பிணி தேர்வாளருக்கும், அடையாள அட்டை மறந்த தேர்வாளருக்கும் சிறப்பு உதவிகள் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி