விழுப்புரம் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு விசிக சார்பில் மரியாதை

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. முற்போக்கு மாணவர்கள் கழகத்தைச் சேர்ந்த பிரசாந்த் மூலம் பெரியதச்சூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கீழ்வெண்மணி தியாகிகள் உருவப்படங்களுக்கு விசிக விழுப்புரம் மைய மாவட்டச் செயலர் வழக்குரைஞர் தி. திலீபன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் விசிக ஒன்றியச் செயலர்கள் கு. கார்மேகம், கு. ரஞ்சித்குமார், நகரச் செயலர் பெ. சந்தா், நிர்வாகிகள் கோ. கார்வண்ணன், ரஜினிசெல்வம், வழக்குரைஞர் ப. இளஞ்சேரன், க. சுரேஷ், பன்னீர்செல்வம், மோ. சுரேஷ், சுனில் உள்ளிட்டோர் பங்கேற்று, கீழ்வெண்மணி தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி