தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான மாதாந்திர குறைதீர் முகாம் நாளை (பிப்.14) நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் நடைபெறும் இந்த முகாம், தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படும். இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். மேலும், தரமற்ற ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்தும் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்.