விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலன் தனது தாய் நாகாவுடன் கடந்த 14 ஆம் தேதி விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் அரசு டவுன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது, நாகா அணிந்திருந்த 6 சவரன் தாலிச் செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பாலன் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.