இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்று தென் மாவட்டங்களை நோக்கி 38 ஆயிரம் வாகனங்கள் சென்றன. நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
நேற்று (டிசம்பர் 28) இரவு 7.00 மணி வரை 35 ஆயிரம் வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றன. நேற்று முன்தினம் (டிசம்பர் 27) தினசரி சராசரியாக செல்லும் 24 ஆயிரம் வாகனங்களை விட 14 ஆயிரம் வாகனங்களும், நேற்று கூடுதலாக இரவு 7 மணி வரை 11 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றன.