விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் 90 கிராம் கஞ்சா வைத்திருந்த பானாம்பட்டு இளந்திரையன், 29; சென்னை வியாசர்பாடி சுரேஷ், 28; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து இளந்திரையனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி