இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் இவ்விரு இடங்களை கடந்து செல்ல அவதி அடைகின்றன. சாலையை மெதுவாக கடக்கும்போது, வடக்கு பைபாஸ் முனையில் இருந்து தெற்கு பைபாஸ் முனை வரை 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களில் சராசரியாக 34 ஆயிரம் வாகனங்கள் சென்னைக்கு செல்லும். நேற்று முகூர்த்த நாள் என்பதால் மாலை 7.30 மணி வரை 42 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளாசாவை கடந்து சென்றன. மேம்பால பணிகள் நடக்கும் அரசூர், கெடிலம், இருவேல்பட்டு பகுதிகளிலும் இதுபோன்று சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக சென்றன.
இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்