விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த பள்ளித்தென்னல் கிராமத்தில், கணேசன் என்பவரது வீட்டின் மாடியில் கடந்த 9 ஆண்டுகளாக வாடகை ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்த, சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 மீட்டர் உயரமுள்ள கைப்பேசி கோபுரம் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு சாதனங்கள் மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரி கார்த்திக் அளித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.