பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று பேசினார். பனையபுரம், வி.சாத்தனூர், ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
முகாமில் தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நலத் தாசில்தார் வேல்முருகன், தேர்தல் தனித் தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ., பாபு, இளநிலை உதவியாளர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர்கள் ஜெயசன், கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், பேரூராட்சி துணைச் சேர்மன் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.