விழுப்புரம்: 900 பேர் மீட்பு.. தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த 30ம் தேதி தொடங்கி 3 நாட்கள் பெய்த கனமழை வெள்ளத்திலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 15 பேர் இறந்தனர். 450 கால்நடைகள் இறந்தன. 

பேரிடர் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் பங்களிப்பு அதிகளவில் இருந்தது. கனமழை வெள்ள பேரிடர் மீட்பு பணியில் கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 5ம் தேதி வரை தொடர்ச்சியாக மீட்பு பணியில் அனைத்து தீயணைப்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில் விழுப்புரம், பலவேறு மாவட்டங்களில் இருந்து வந்த தீயணைப்பு குழுவினர், 5 நாட்களும் முகாமிட்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் 40 பேரும், வெளிமாவட்ட வீரர்கள் 70 பேரும் பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

பல இடங்களில் வீடுகளில், உயிருக்கு போராடிய 32 பேரை ரப்பர் படகு மூலம் மீட்டனர். பலவேறு பகுதிகளில் 50 பேர் என 900 பேரை படகு மூலமும், கயிறு கட்டியும் மீட்டனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய 55 ஆடு, மாடுகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களும் இரவு, பகல் என சுழற்சி முறையில் வீரர்கள் அழைப்பு வந்த இடங்களில் தீவிரமாக செயல்பட்டு மீட்பு பணி மேற்கொண்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி