இந்தப் பாலம் கட்டப்பட்டதை காரணமாகக் கூறி, ஜானகிபுரத்திலிருந்து கண்டமானடி கிராமத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே (விழுப்புரம் - திருச்சி ரயில் வழித்தடம்) அமைந்துள்ள ரயில்வே கடவுப்பாதை கடந்த மாா்ச் 22-ஆம்தேதி இரவு மூடப்பட்டது. தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஜானகிபுரத்திலிருந்து கண்டமானடி, கொளத்தூா், பில்லூா், அரியலூா், சித்தாத்தூா், காவணிப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், அங்கிருந்து விழுப்புரம் நகரத்துக்குச் செல்லவும் சுமாா் 5 கி. மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்