விழுப்புரம் தென்மேற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கானை ஒன்றியம் சார்பில், சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி இன்று காலை காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் முத்து ஸ்ரீதர், ரமேஷ் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் A. விஜய்வடிவேல் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.