அன்னியூரில் போலி பட்டாக்களை ரத்து கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரில், முஸ்லிம் மக்கள் கழகம் மற்றும் பாதிக்கப்பட்டோர் கழகம் இணைந்து போலி பட்டா ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டோர் கழக மாநில பொருளாளர் ஆரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ச. சு. ஜைனுதீன் துவக்கி வைத்து உரையாற்றினார். போலி பட்டா, கையெழுத்து, பத்திரப்பதிவு, நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி