விழுப்புரம்: பயணிக்கு எலும்பு முறிவு; அரசு பஸ் டிரைவர் கைது

விழுப்புரம் அடுத்த சேர்ந்தனூரை சேர்ந்தவர் அஞ்சாபுலி மகன் வீரப்பன், 31. இவர், நேற்று முன்தினம் (டிசம்பர் 17) மாலை சேர்ந்தனூரிலிருந்து வளவனூர் செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது, இவர் ஏறுவதற்கு முன்பு டிரைவர் பஸ்சை இயக்கியதால், கீழே விழுந்ததில், வீரப்பனின் கால் எலும்பு முறிந்தது. 

அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், பஸ் டிரைவர் குமார், 40; மீது, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி