கண்டெய்னரை திறந்து பார்த்த போது லாரியினுள் இருந்த பார்சல்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரியினுள் இருந்த உணவு பொருட்கள், துணி, இரு சக்கர வாகனம், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல் பொருட்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
விக்கிரவாண்டி போலீசார் நேற்று (செப்.,28) வழக்குப்பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்ததில், பார்சல் பைக்கிலிருந்த பெட்ரோல் கசிவால் தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது.