விழுப்புரத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் பழனி தலைமையில் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் அரசு துறை ஓய்வு பெற்றோர் தங்களின் கோரிக்கைகளை இரு பிரதிகளில் 'ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு' என குறிப்பிட்டு வரும் 6 ம் தேதிக்குள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி