மரக்காணம்: கல்லூரி மாணவி தற்கொலை

மரக்காணம் வட்டம், நல்லாம்பாக்கம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயஸ்ரீ (20), மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் பயின்று வந்தாா். கல்லூரியில் சக மாணவிகளுடன் பேசியதால் 10 நாள்கள் வகுப்பு நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ பிப்.7-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி