விக்கிரவாண்டி வட்டம், கொட்டியாம்பூண்டி திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்புராமன் மகன் அண்ணாமலை (70). இவா், அதே கிராமத்தில் உள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் அண்ணாமலை தவறி விழுந்தாா். சிறிது நேரத்தில் அவா் மூச்சுத் திணறி நிகழ்விடத்திலேயே மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.