கெடார் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் பார்த்தீபன், 60; கூலித் தொழிலாளி. இவருக்கு அரசு வழங்கிய வீடு கட்ட அடித்தளமிட்டு சுவர் எழுப்பி கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த செல்வன் மனைவி சரஸ்வதி, 62; அவரது மகன்கள் வீரபாண்டியன், 39; சரவணன், 38; உமாபார்வதி, 48; ஆகியோர் கூட்டாக சேர்ந்து, முன்விரோதம் காரணமாக பார்த்தீபன் வீட்டின் சுவரை இடித்தனர். இது பற்றி கெடார் போலீஸில் பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், வீட்டை இடித்த 4 பேர் மீதும் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர்.