அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டும், வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டும் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். இதேபோல், பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு