விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் குறைகேட்பு முகாம்

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. வருவாய் துறை சார்பில் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களை பெற்றார். தேர்தல் துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி