வானுார் அருகில் உள்ள எடப்பாளையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சவுக்கு மரம் லோடு ஏற்றி வந்த டி. என். 52. ஏ. 7355 எண்ணுடைய டாராஸ் லாரி விக்கிரவாண்டி அடுத்த சித்தணி ரோடு, பைபாஸில் நின்று கொண்டிருந்தது. லாரி நீண்ட நேரம் நிற்பதால், நெடுஞ்சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்பட்டு லாரியில் இருந்து உரிமையாளர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அவரது லாரி வேலூரில் ஓடிக்கொண்டு இருப்பதாக தகவல் கூறினார்.