அப்போது பணியில் இருந்த மாற்றுத்திறனாளிகள் 10 பேர் தங்களுக்கு சாலை ஓரமாக பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறி பணி செய்ய மறுத்து காலை 10:00 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் சங்க மகளிர் அணி செயலாளர் மங்கையர்க்கரசி தலைமையில் விக்கிரவாண்டி நரசிங்கனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், பணி மேற்பார்வையாளர் அபிதா, ஊராட்சி செயலாளர்கள் பழனிவேல், சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணி நடைபெறும் இடத்தில் அரசு விதிமுறைப்படி ஜி.பி.எஸ்., லொகேஷன் போட்டோ எடுக்க வேண்டும் என்பதால் அந்த இடத்தில் தான் பணி செய்ய வேண்டும். மூன்று சக்கர வாகனம் பணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் சரிசெய்து தருவதாக கூறியதைத் தொடர்ந்து அனைவரும் 10:30 மணியளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.