மேலும் அதே பகுதியில் பொது நூலகங்களின் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடப் பணி, முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் தார்ச்சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். பள்ளியந்தூர் ஊராட்சியில் ரூ. 19.33 கோடியில் கட்டப்பட்டு வரும் இரு பாலருக்கான மாதிரிப் பள்ளி, விடுதி போன்றவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சி. பழனி, கட்டமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை