விக்கிரவாண்டி: கார் ஓட்டுநர் தற்கொலை

விக்கிரவாண்டி வட்டம், பெருங்கலாம்பூண்டி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் ஓமகேசவன் (28). திருமணமான இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். சென்னையில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ஓமகேசவன் திங்கள்கிழமை விக்கிரவாண்டி வட்டம், மேலக்கொந்தையில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். 

பின்னர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூர் போலீசார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி