விழுப்புரத்தில் வீடு புகுந்து திருடிய சிறுவன் கைது

விழுப்புரம், முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 55; இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் மாடியில் இருந்தபோது, தாழ்பாள் போடாமல் இருந்த கதவை, 14 வயது சிறுவன் திறந்து, 1000 ரூபாயை திருடிக் கொண்டு ஓடினார். சக்கரவர்த்தி அந்த சிறுவனை பிடித்து, விழுப்புரம் டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், சிறுவன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி