விழுப்புரம்: கார் மீது ஆட்டோ மோதி விபத்து ; 4 பேர் காயம்

விழுப்புரம், வி. மருதுபாரை சேர்ந்தவர் ஏழுமலை, 40; இவர், நேற்று முன்தினம் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி மார்க்கமாக சென்றார். கோலியன்குறிச்சி அருகே சென்ற போது, முன்னால் சென்ற ஷிப்ட் கார் ஓட்டியவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஏழுமலை, ஆட்டோவில் பயணித்த வி. மருதுபாரை ராஜேஸ்வரி, 40; கோமதி, 74; பூங்கொதை, 70; ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அங்கிருந்த சிலர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெறுகின்றனர். வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி